கம்போடியாவில் தடுத்து வைக்கப்பட்ட மலேசியர்கள் நாடு திரும்பினர்

கோலாலம்பூர்: கம்போடியாவில் தடுத்து வைக்கப்பட்ட மலேசியர்கள் நேற்று நாடு திரும்பியுள்ளனர். “தண்ணீருக்காகக் கெஞ்சினேன், சிறை வாழ்க்கை கொடுமையானது, எனக்கு மட்டுமல்ல அனைத்து மலேசியர்களுக்கும் இரு ஒரு பாடம். கவர்ச்சிகரமான வேலை வாய்ப்பு, சம்பளத்தை நம்பி ஏமாந்துவிட்டேன்,” என்று நாடு திரும்பிய 47 மலேசியர்களில் ஒருவரான        27 வயது இங் ‌ஷிங் லோங் சொன்னார். ஓட்டலில் 1,200 யுஎஸ் டாலர் சம்பளத்துக்கு வேலை கிடைக்கும் என்று கூறி முகவர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சென்றதும் எங்களுடைய பாஸ்போர்ட்டையும் கைத்தொலை பேசியையும் பறித்துக்கொண்டு ஒரு பங்களாவில் அடைத்து விட்டனர் என்றார் அவர். ஏமாற்றியது, சட்டவிரோத இணையத்தள சூதாட்ட விளையாட்டுக்கு முயற்சி செய்தது  ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த டிசம்பர் மாதத்தி லிருந்து 47 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.