‘மின்தூக்கி கொள்ளையன் பற்றி தகவல் அளித்தால் $10,000 ரிங்கிட் பரிசு’

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் செராஸ் எம்ஆர்டி நிலையத்தில் மின்தூக்கிக்குள் பெண்ணைத் தாக்கியவர் பற்றி நம்பகமான தகவல் கொடுப்பவர்களுக்கு பத் தாயிரம் ரிங்கிட் வெகுமதி அளிக் கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது.
கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் இந்த வெகுமதியை அறிவித்துள்ளார்.
“மின்தூக்கியில் பெண்ணைத் தாக்கியவரை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறை யினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே சமயத்தில் கொள்ளையரைப் பற்றிய தகவல் கிடைக்க இந்த வெகுமதி உதவும்,” என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் லிம் லிப் எங் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை நடந்த சம்பவம் தொடர்பில் கொள்ளை யனைப் பிடிக்க காவல்துறை யினர் 200 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளனர்.
அன்பர் தினத்தன்று திடீரென ஒருவன் முகத்தில் குத்தியதால் 48 வயது பெண் நிலைகுலைந்து போனார்.
கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியில் மின்தூக்கிக் குள் நுழையும் பெண்ணை பின் தொடர்ந்து அடையாளம் தெரியாத ஒரு நபர் உள்ளே நுழைவதைக் காண முடிகிறது.
மின்தூக்கியின் கதவு மூடிய சில நொடிகளில் பெண்ணின் முகத்தில் அந்த நபர் ஓங்கிக் குத்துகிறார். இதனால் அந்தப் பெண் அதிர்ச்சியில் கீழே விழு கிறார். பெண்ணின் மீது பலமுறை மீண்டும் குத்திய மர்ம நபர் கைப்பையைப் பறித்துக்கொண்டு ஓட முயற்சி செய்கிறார். அதை தடுக்க பெண் முயற்சி செய்தபோது மீண்டும் ஓங்கி ஓங்கி பெண்ணைக் குத்தி தரையில் இழுத்துத் தள்ளு கிறார் அந்த நபர்.
பின்னர் மின்தூக்கி கதவு திறந்ததும் கைப்பையிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு மர்ம நபர் வெளியேறுகிறார்.
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால் ஏராளமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.