‘பாஸ்-பெர்சாத்து கூட்டு இல்லை’

பூச்சோங்: பாஸ் கட்சியுடன் கூட்டு சேரும் திட்டமில்லை என்று மலேசிய பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவரும் பிரதமருமான டாக்டர் மகாதீர் அறிவித்துள்ளார்.
அண்மையில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், தலைமைச் செயலாளர் தக்கியூடின் ஹசன், திரங்கானு முதல்வர் அஹமட் சம்சுரி மோக்தார் ஆகியோர் பிரதமர் மகாதீரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மகாதீர் தலைமைத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ளதாக பாஸ் கட்சியினர் கூறினர்.
இந்நிலையில் பாஸ் கட்சியுடன் கூட்டு சேருவது குறித்து மகாதீர் பேசியுள்ளார்.
“பாஸ் கட்சித் தலைவர்களைச் சந்தித்தபோது ஒத்துழைப்பு பற்றி பேசவில்லை. செமினி இடைத் தேர்தலில் அம்னோ கட்சியை ஆதரிக்க மாட்டோம் என்று மட்டுமே அவர்கள் என்னிடம் கூறினர். அதே சமயத்தில் பெர் சாத்து கட்சி  வேட்பாளருக்காக பக்கத்தான் ஹரப்பானை ஆதரிப் போம் என்றும் அவர்கள் கூற வில்லை,” என்றார் டாக்டர் மகாதீர்.
நேற்று மலேசிய தேசிய சமூக கொள்கை திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பிரதமர் பேசினார்.
தக்கியூடின் கையெழுத்திட்ட மாதிரி ஆதரவுக் கடிதம் மட்டுமே தனக்கு வந்துள்ளதாகக் கூறிய திரு மகாதீர், ஹாடி அல்லது சம்சுரி கையெழுத்திட்ட கடிதம் எதுவும் வரவில்லை என்றார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார்  அந்த விமானத்தின் சிப்பந்தி. படம்: காணொளி ஸ்கிரீன்கிராப்

19 Jun 2019

மோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி

அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.
படம்: ராய்ட்டர்ஸ்

19 Jun 2019

ஜி20 மாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப்

அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் உச்சநிலை மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடக்கவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

ஜி-20 உச்சநிலை மாநாட்டில் வர்த்தகமும் உலக வர்த்தக நிறுவனத்தின் சீரமைப்பும் விவாதிக்கப்படும்: ஜப்பான்