சமையலறைக் கத்திமீது விழுந்து இறந்த சிறுமி

மலேசியாவின் ஈப்போ மாநிலத்தில் சமையலறைக் கத்தி ஒன்றின்மீது விழுந்த இரண்டு வயது சிறுமி, வயிற்றில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந்தார்.

நூர் கைசாரா மதீனா சுப்பியான் இறந்துவிட்டதாக ‘பரிட் புந்தார்’ மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கம்போங் தெலுக் பியால் பாரோவிலுள்ள தங்களது வீட்டில் நடந்ததாக அந்தச் சிறுமியின் 27 வயது தாயார் ஹனா மஸ்லான் தெரிவித்தார். தனது நான்கு மாதக் குழந்தையைத் தூங்க வைத்துக்கொண்டிருந்த நேரத்தில் சிறுமிக்கு இவ்வாறு நேர்ந்ததாகத் தாயார் கூறினார்.

“தரையில் இருந்த தட்டு ஒன்றில் அந்தக் கத்தி வைக்கப்பட்டிருந்தது. நூர் கைசாரா அந்தத் தட்டின்மீது தவறுதலாக மிதித்து கத்திமுனையின் மீது விழுந்தாள். கைசாராவின் சகோதரர் மாம்பழத்தின் தோலை உரிப்பதற்காகக் கத்தியை அந்தத் தட்டில் வைத்திருந்தார்,” என்று ஹனா தெரிவித்தார். நூர் கைசாராவின் வயிற்றிலிருந்து அந்தக் கத்தியைத் தனது மாமியார் வெளியே இழுத்ததை அடுத்து தனது மகள் சுயநினைவு இழந்ததாக நூர் கைசாரா கூறினார். 

கத்தியின் நீளம் 15 சென்டிமீட்டர் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய முன்னாள் பேரரசர் சுல்தான் முகம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த ரிஹானா ஒக்சானா தம்பதியின் திருமண வாழ்க்கை ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. படம்: ரிஹானா/இன்ஸ்டகிராம்

21 Jul 2019

மலேசிய முன்னாள் பேரரசர், ரஷ்ய முன்னாள் அழகி தம்பதியின் விவாகரத்தை உறுதிசெய்த சிங்கப்பூர் வழக்கறிஞர்