மலேசியா: திருமணத்திற்காக போலி நோட்டுகளை அச்சிட்ட ராணுவ வீரர் தடுத்துவைப்பு

சிபு: மலேசிய ராணுவ வீரர் ஒருவர் தமது திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் போலி நோட்டுகளை அச்சிட்டு வங்கியை ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
4,000 ரிங்கிட் (S$1,330) மதிப்புமிக்க போலி நோட்டுகளை அவர் அச்சிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தக் குற்றத்திற்காக சுங்கை மேரா காவல் நிலையத்தில் அந்த 28 வயது சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டார். அவர் நூறு ரிங்கிட் மதிப்புமிக்க 25 நோட்டுகளையும் ஐம்பது ரிங்கிட் மதிப்புமிக்க 30 நோட்டுகளையும் சிபுவில் இருக்கும் தமது ராணுவ முகாமில் அச்சிட்டதாக நம்பப்படுகிறது.
அடுத்த மாதம் 30ஆம் தேதி நடைபெறவுள்ள தமது திருமணத்திற்குப் போதுமான பணம் இல்லாததால் அவ்வாறு செய்ததாக அந்த சந்தேக நபர் கூறினார். இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.