இங்கிலாந்து அரச குடும்பத்தில் சச்சரவு: இளவரசர்கள் வில்லியம், ஹாரி பிரிந்தனர்

லண்டன்: இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்கள் வில்லியமும் ஹாரியும் ஒற்றுமையாக இருந்து வந்தனர். திருமணமான அவர்களுக்கு தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து இருவரும் தனித்தனியாக பிரிந்துவிட்டனர். தற்போது இருவரும் தங்களின் அறக்கட்டளை பணிகள் மற்றும் அரச குடும்பத்து பணிகளை தனித்தனியாக கவனிக்கின்றனர். இதற்கு முன்பு அப்பணிகளை சகோதரர்கள் இருவரும் சேர்ந்தே கவனித்தனர்.