பாகிஸ்தானில் $20 பில்லியன் முதலீடு: சவூதி அரேபியா கையெழுத்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதார நிலை­­யை மீட்டெடுக்கும் வகையில், அந்நாட்டில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ளும் பல்வேறு உடன்பாடுகளில் சவூதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.
சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ் தானுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தனது நாட்டில் நிலவும் பொரு ளாதார நிலையற்றத்தன்மையைச் சரிகட்டுவதற்கு அனைத்துலக உதவியை பாகிஸ்தான் எதிர் நோக்கியிருந்த நிலையில், சவூதி இந்த முதலீடுகளின் மூலம் கைகொடுத்துள்ளது.