தாய்லாந்தை அச்சுறுத்தும் கொளுத்தும் வெயில்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கொளுத்தும் வெயிலிலிருந்து வெப்பத்தைத் தணிக்க கடற்கரைக்குப் படையெடுக்கும் மக்கள்.  படம்: இபிஏ

பேங்காக்: வரலாற்றிலேயே இந்த ஆண்டு இரண்டாவது ஆக வெப்பமான ஆண்டாக அமை வதற்கு 50 விழுக்காடு சாத்தியம் உள்ளது.
இனி வரக்கூடிய நாட்களில் வெப்பமான வானிலைக்கு தாய் லாந்து மக்கள் தங்களைத் தயார்ப்­ படுத்திக்கொள்ள  வேண்டி யிருக்கும். அந்நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் உள்ள ஏழு மாநிலங்களில் வெப்பநிலை 40க்கும் 44 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர்.
இவ்வாண்டு உலகம் முழுவதும் வழக்கத்திற்கு மாறான வானி லையை எதிர்பார்க்கலாம் என்று முன்னணி பருவநிலை அறிவி யலாளர்கள் எச்சரித்து­­ள்ளனர்.
உலக வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்றால், இவ்வாண்டு உலக சராசரி வெப்பநிலை முந்தைய ஆண்டின் பதிவை முறி யடித்து வரலாற்றிலேயே இரண் டாவது ஆக வெப்பமான ஆண் டாக அமைவதற்கு 50 விழுக்காடு சாத்தியம் உள்ளது.