எகிப்திய தலைநகர் கைரோவில் வெடிப்பு; இருவர் பலி

எகிப்திய தலைநகர் கைரோவில் நேற்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மூவர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுப்பயணத் தலமாகத் திகழும் ‘அல்-அஸார்’ பள்ளிவாசலுக்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

போலிசாரைத் தாக்க முயன்ற ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்ய முயன்றபோது அந்த ஆடவரிடம் இருந்த வெடிபொருள் திடீரென வெடித்ததாக எகிப்திய அதிகாரிகள் கூறினர்.

காயமடைந்த பொதுமக்களில் தாய்லாந்தைச் சேர்ந்த மாணவரும் ஒருவர் என்று தகவல்கள் கூறுகின்றன.