கேளிக்கை கூடத்தில் துப்பாக்கிச்சூடு; குற்றச்சாட்டுகளை மறுக்கும் சந்தேக நபர்

2017ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் கேளிக்கை கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இன்று நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் காதீர் மஷரிபோவ், ஈராண்டுக்கு முன்னர் ஜனவரி 17ஆம் தேதி பிடிபட்டார். ஐ.எஸ் அமைப்பின் சார்பில் அவர் அந்தத் தாக்குதலை நடத்தியதாக போலிசார் தெரிவித்தனர். சிரியாவில் நடந்து வந்த பூசலில் துருக்கிய ராணுவம் கலந்துகொண்டதற்குப் பதிலடியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக ஐ.எஸ் கூறியது.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 58 நபர்களில் மஷரிபோவ்வும் ஒருவர். அவர்களில் இதுவரை 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 39 பேர் சிறையில் உள்ளனர். அடுத்த நீதிமன்ற விசாரணை மே 16ஆம் தேதி நடைபெறும்.