நச்சுணவால் பாதிப்பு; கேஎஃப்சி உணவகங்களை மூடிய மங்கோலியா

மங்கோலியாவில் ‘கேஎஃப்சி’ உணவகம் ஒன்றில் சாப்பிட்ட நூற்றுக்கணக்கானோருக்கு நச்சுணவால் பாதிக்கப்பட்ட அறிகுறிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் அனைத்து கேஎஃப்சி உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.

உலான்பாடரில் கடந்த வாரம் இந்தச் சம்பவம் நடந்தது. சுகாதார பரிசோதனைகள் மோசமாக இருந்ததுதான் இதற்குக் காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மங்கோலியாவில் தற்போது 11 கேஎஃப்சி உணவகங்கள் உள்ளன. அவை அனைத்தும் அந்நாட்டின் தலைநகர் உலான்பாடரில் உள்ளன.

Loading...
Load next