அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக பெர்னி சேண்டர்ஸ் அறிவிப்பு

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக பெர்னி சேண்டர்ஸ் அறிவிப்பு

1 mins read
489a3419-91db-4686-9d74-bf6e64c8e0f5
-

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக செனட்டர் பெர்னி சேண்டர்ஸ் (படம்) அறிவித்துள்ளார்.2016ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலில் அவர் முயன்றார். அப்போது அவர் ஹில்லரி கிளின்டனிடம் தோற்றார். இம்முறை மீண்டும் அவர் தேர்தலில் களமிறங்குகிறார்.

தேர்தலில் போட்டியிட தாம் எடுத்த முடிவை தமது சொந்த ஊரான வெர்மோன்ட்டில் 77 வயது சேண்டர்ஸ் வானொலி பேட்டியின்போது அறிவித்தார்."தற்போதைய அதிபர் நமது நாட்டுக்குக் கிடைத்திருக்கும் அவமானம் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு பொய்யர். அதுமட்டுமல்லாது, அவர் சிறுபான்மை இனத்தவர்களை எதிர்த்து அரசியல் லாபம் சம்பாதிக்க பார்ப்பவர்," என்று சேண்டர்ஸ் வானொலி பேட்டியில் குற்றம்சாட்டினார்.

நீதியின் மீது நம்பிக்கை வைத்து செயல்பட இருப்பதாக அவர் கூறினார். திரு சேண்டர்சுக்கு அதிக ஆதரவு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.