டிரம்ப்: 16 மாநிலங்கள் வழக்கு

அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்காக அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தும் திட்டத்தை எதிர்த்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிராக நியூயார்க், கலிஃபோர்னியா உள்ளிட்ட 16 மாநிலங்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளன.
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோத மாக நுழைபவர்களைத் தடுப்ப தற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட திரு டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். 
இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது.
ஆனாலும், மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் திரு டிரம்ப், இதற்கான நிதியை பெறு வதற்காக நாட்டில் அவசர நிலையைப் பிறப்பித்தார். இதற் கான தீர்மானத்தில் கையெழுத் திட்ட அவர், இது தொடர்பாக செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.
நாட்டில் அவசரநிலை பிறப் பிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு சமூக குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சட்ட நடவடிக்கை மூலம் அவசரநிலையை முடி வுக்கு கொண்டுவர திட்டமிட்ட னர். அதன்படி, கலிஃபோர்னியா தலைமையில் 16 மாநிலங்கள் இணைந்து வழக்கு தொடர்ந்து உள்ளன. கலிஃபோர்னியா வடக்கு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
நாட்டில் அவசரநிலையை அறி வித்திருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயல் என்றும் பல்வேறு நீதிமன் றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதால், டிரம்பின் அவசர நிலை பிரகடனத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரு டிரம்ப் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்து வதையும் மக்களின் வரிப் பணத்தைத் திருடுவதையும் தடுப்பதற் காகவே வழக்கு தொடரப்பட்டி ருப்பதாக கலிஃபோர்னியா தலைமை வழக்கறிஞர் சேவியர் பெசிரா தெரிவித்தார்.