ஈப்போ கடைத்தொகுதியில் தீ; அறுவர் பலி

ஈப்போ கடைத்தொகுதியில் தீ; அறுவர் பலி

1 mins read
9c9ce7ae-fed3-415c-b1a0-e8b8bc747dde
-

ஈப்போ மாநிலத்திலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் நடந்த தீச்சம்பவத்தில் அறுவர் உயிரிழந்ததாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஜாலான் ராஜா டாக்டர் நஸ்ரின் ஷா' சாலையிலுள்ள டைம்ஸ் ஸ்குவேர் கடைத்தொகுதியில் இந்தச் சம்பவம் நேர்ந்தது.

உதவிக்கான அழைப்பு தீயணைப்புத் துறைக்கு நேற்று அதிகாலை கிடைத்ததாக 'த ஸ்டார்' நாளிதழ் தெரிவித்தது.

தீ மூண்டதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாக மாநில போலிசார் தெரிவித்தனர்.