மலேசியாவின் முன்னைய துணைப்பிரதமர் மீது மற்றொரு பண மோசடி குற்றச்சாட்டு

மலேசியாவின் முன்னைய துணைப்பிரதமர் அகமது சாஹிட் ஹமிடி மீது மற்றொரு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு இன்று அமர்வு நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி, திரு ஹமிடி ‘யாயாசான் அகால் புடி’ என்ற தனது நன்கொடை நிறுவனத்திலிருந்து 260,000 ரிங்கிட் பணத்தை எடுத்து ‘டிஎஸ் கன்சல்டன்சி அன்ட் ரிசார்சஸ்’ நிறுவனத்திற்கு முறைகேடாகக் கட்டணம் செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. 

மொத்தம் சுமார் 72,000,000 ரிங்கிட் மதிப்புள்ள 46 பண மோசடி குற்றச்சாட்டுகள் திரு ஹமிடி மீது ஏற்கனவெ சுமத்தப்பட்டுள்ளன. 1எம்டிபி நிறுவனத்துடன் தொடர்புடைய இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் திரு ஹமிடி மறுக்கிறார்.