மலேசிய தற்காப்பு அமைச்சுக்கு $166 மில்லியன் இழப்பு

கோலாலம்பூர்: மலேசிய தற்காப்பு அமைச்சின் தனியார்மயமாக்கல் திட்டத்தின் கீழ்,  4.75 பில்லியன் ரிங்கிட் பெறுமான நிலத்தை தனியாருக்கு மாற்றிக்கொடுத்த தன் மூலம் அமைச்சுக்கு 500 மில்லியன் ரிங்கிட் (S$166 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக  தற்காப்பு அமைச்சர் முகம்மது சாபு கூறியுள்ளார்.
அந்த நில விற்பனை ஒப்பந்தங்கள் தொடர்பில் முன்னாள் தலைமை தணிக்கை யாளர் ஆம்ரின் புவாங் தலைமை யிலான புலன்விசாரணைக் குழுவின் அறிக்கை தற்காப்பு அமைச்சுக்கு கிடைத்திருப்பதாக மாட் சாபு என்று அழைக்கப்படும் திரு முகம்மது கூறினார்.
தற்காப்பு அமைச்சுக்கு சொந்தமான 2,932 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய 16 உடன்பாடுகள் குறித்து அக்குழு விசாரணை செய்தது. அந்த நிலத்தின் மதிப்பையும் சேர்த்து அத்திட்டங்களுக்கு 4.88 பில்லியன் ரிங்கிட் செலவாகி யிருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளதாகவும் மாட் சாபு ஓர் அறிக்கையில் கூறினார்.
அந்த நில விற்பனைத் திட்டங்களில் பெரும்பான்மைத் திட்டங்கள் விவரமாகத் திட்டமிடப் படாமலேயே நடப்புக்கு கொண்டு வரப்பட்டதாக தற்காப்பு அமைச்சிடம் தெரிவிக்கப்பட்ட தாகவும் அவர் சொன்னார். நில விற்பனையில் அரசியல் தலையீடு இருந்தது தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.