ஈப்போ கேளிக்கை மையத்தில்  மூண்ட தீயில் 6 பேர் பலி

கோலாலம்பூர்: ஈப்போவில் உள்ள கேளிக்கை மையத்தில் நேற்று மூண்ட தீயில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினார். அந்த 6 பேரில் நால்வர் ஆடவர்கள் என்றும் மற்ற இருவர் வியட்னாமியப் பெண்கள் என்றும் தீயணைப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் கூறினார். அக்கட்டடத்தில் மூண்ட தீயை 39 பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் பல மணி நேரத்திற்குப் பிறகு அணைத்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.