டிரம்ப்: அணுவாயுத உடன்பாடு காண அவசரப்படப்போவதில்லை 

வா‌ஷிங்டன்: வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தை கைவிடுவது தொடர்பில் உடன்பாடு காண தான் அவசரப்படப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா அண்மையில் அணுவாயுத சோதனை அல்லது ஏவுகணை சோதனையை மேற்கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டிய திரு டிரம்ப், உடன்பாடு காணும் வரை வடகொரியா மீதான  தடைகள் நீடித்திருக்கும் என்று சொன்னார்.