அம்னோ தலைவர் ஸாஹிட் மீது  நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு 

கோலாலம்பூர்: ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில்   
குற்றம் சாட்டப்பட்டது. யாயாசான் அகால்புடி  அறக்கட்டளை அமைப்பின் அறங்காவலராக ஸாஹிட் இருந்தபோது அறக்கட்டளை நிதியில் 260,000 ரிங்கிட் பணத்தை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி அவர் அக்குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவருக்கு இரண்டிலிருந்து 20 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மலேசிய முன்னாள் துணைப் பிரதமரான ஸாஹிட் மீது ஏற்கெனவே 47 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்