வாடிக்கையாளர்கள் புகார்; உணவுக்கடை சமையற்காரர் கைது

வாடிக்கையாளர்கள் புகார்; உணவுக்கடை சமையற்காரர் கைது

1 mins read
66f24880-927a-47d7-a176-2cd940e2a45a
-

பேராக்: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள உணவுக் கடை ஒன்றில் உணவு சாப்பிட்ட பிறகு மயக்கமும் மனப் பிரமையால் மாயத்தோற்றங்களும் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து அக்கடையின் சமையற்காரரும் அவரது உதவியாளரும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அம்மாநிலத்தில் தெலுக் இந்தான் நகரில் உள்ள 'சுல்தானா நாசி கந்தார்' எனும் கடையில் வாடிக்கையாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உணவு அருந்தினர்.

புகாரின் பேரில் சுகாதாரத் துறையினரும் போலிசும் விசாரணை நடத்தியதில் அந்தக் கடையின் ஊழியர்கள் மூவரும் வலியைத் தணிக்க உதவும் ஒரு வகை ஊக்க மருந்தை உட்கொண்டிருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, 30க்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பங்ளாதேஷ் நாட்டவர்.