கோலாலம்பூர்: அம்னோ மற்றும் தேசிய முன்னணி கூட்டணியின் சட்ட ஆலோசகராகச் செயல்பட்டு வந்த முன்னணி வழக்கறிஞர் ஹஃபாரிசாம் ஹருண் என்பவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று முன்தினம் கைது செய்ததையடுத்து நேற்று அவர் மீது கோலாலம்பூர் நீதி மன்றத்தில் குற்றம் சுமத்தப் பட்டது. 2014க்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலகட்டத்தில் 15 மில்லியன் ரிங்கிட் (S$4.98 மில்லியன்) ஊழல் மற்றும் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார். ஆயினும், அவர் மீது சுமத் தப்பட்ட இரு குற்றங்களையும் ஹஃபாரிசாம் மறுத்துள்ளார். மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து அத்தொகையை மூன்று காசோ லைகளாக 47 வயது ஹஃபாரி சாம் பெற்றுக்கொண்டார் என்று கூறப்படுகிறது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள முதல் குற்றச்சாட்டின்படி, சட்ட விரோதமான நடவடிக்கையின் வாயிலாக ஹஃபாரிசாம் 11.5 மில்லியன் ரிங்கிட் பெற்றார். இரண்டாவது குற்றச்சாட்டில், மீண்டும் அதே சட்டவிரோதமான நடவடிக்கையின் மூலம் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி 3.5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2001ஆம் ஆண்டுக்கான பயங்கரவாத நிதியம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஹஃபாரிசாம் குற்றம் சாட்டப் பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஹஃபாரிசாமுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக் கப்படுவதுடன் பெறப்பட்ட பணத் தைவிட ஐந்து மடங்கு அபராதத் தொகையையும் அவர் செலுத்த வேண்டியிருக்கும்.
அம்னோ வழக்கறிஞர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள்
1 mins read

