ஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது: டிரம்ப் உத்தரவு

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்திலிருந்து புறப்பட்டு ஐஎஸ் பயங்கரவாதி களுடன் இணைந்த அமெரிக்க பெண் மீண்டும் நாடு திரும்ப முடியாது என அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
ஹோடா முத்தானா என்ற அந்த 24 வயது பெண்ணை அமெரிக்காவிற்குள் அனுமதிக் கக்கூடாது என வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பி யோவிற்கு தாம் அறிவுறுத்தியுள்ள தாக திரு டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
துருக்கியில் உள்ள பல்க லைக்கழக நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட முத்தானா, அதற்குப் பதிலாக சிரியாவுக்கு சென்றுவிட்டார். 
பின்னர் இறுதிக்கட்ட தாக்கு  தலின்போது அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் மேலும் சில நாடுகளைச் சேர்ந்த வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பெண் ணின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மீண்டும் அமெரிக்காவிற்கு அவர் திரும்ப இயலாது எனவும் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். 
ஆனால், அவரிடம் முறையான அமெரிக்க குடியுரிமை இருப்பதாக அவரது வழக்கறிஞர்  ஹசான் ‌ஷில்பி கூறியுள்ளார்.