மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் 48 வயது இந்தியர் உயிரிழப்பு

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.
அங்குள்ள பேரங்காடி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் முகமூடி அணிந்த மர்ம நபர் திடீரென உள்ளே நுழைந்தான். அப்போது கடையில் 48 வயது மேலாளர் கோவர்தன் ரெட்டி மட்டும் இருந்தார். 
அவரை அந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். 
இந்தத் தாக்குதலில் கோவர்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலிசார் தீவிர விசார ணையில் ஈடுபட்டு வருகின்றனர்.