கூட்டத்திற்குள் காரை ஓட்டிய ஆடவருக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலியாவில் மக்கள் கூடியிருந்த இடத்தை நோக்கி வேண்டுமென்றே தனது காரை ஓட்டிச்சென்று ஆறு பேரின் மரணத்தை விளைவித்த ஆஸ்திரேலிய ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் மேலும் 27 பேர் காயமடைந்தனர். மாண்ட அறுவரில் மூன்று மாதக் குழந்தையும் 10 வயது சிறுமியும் அடங்குவர்.

ஜேம்ஸ் கார்கசௌலஸுக்கு குறைந்தது 46 ஆண்டுகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா உச்சநீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டபோது 29 வயது ஜேம்ஸ் கார்கசௌலஸ் அமைதியாக இருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டன.