கடை உணவில் கசகசா விதைகள்

உணவுக் கடை ஒன்றில் பணிபுரிந்த சமையற்காரரும் இரண்டு சமையலறை பணியாளர்களும் அங்கு பரிமாறப்படும் உணவில் கசகசா விதைகளைச் சேர்த்ததன் பேரில் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள ‘சுல்தானா நாசி கந்தார்’ என்ற அந்த உணவுக் கடையில் வாடிக்கையாளர்கள் சிலர் உணவைப் புசித்த பிறகு தங்களுக்கு மயக்கமும் மனப் பிரமையால் மாயத்தோற்றங்களும் ஏற்பட்டதாகப் புகார் அளித்தனர். 

சோதனைகளின் மூலம் உணவில் கசகசா விதைகள் சேர்க்கப்பட்டதாகப் பிறகு தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பங்ளாதேஷ் நாட்டவர் எனக் கூறப்படுகிறது.