மோடிக்கு அமைதி பரிசு வழங்கிய தென்கொரியா

தென்கொரியத் தலைநகர் சோலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சோல் அமைதி பரிசு வழங்கப்பட்டுள்ளது. சோல் அமைதி பரிசு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றில் மதிப்புமிக்க அந்த விருது அவருக்குக் கொடுக்கப்பட்டது.

“பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளியைத் திரு மோடியின் பொருளியல் கொள்கை குறைத்துள்ளது. அத்துடன், திரு மோடி பல்வேறு நாடுகளுடன் நேரடியான முறையில் பிணைப்புகளை வளர்க்க முனைந்துள்ளார்,” என்று பரிசு வழங்கிய செயற்குழு தெரிவித்தது. 

திரு மோடி, இந்தப் பரிசைப் பெறும் 14வது நபர். 1990ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமைதி பரிசைப் பெற்றவர்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னைய செயலாளர் கோஃபி அன்னான், ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா மெர்க்கல் ஆகியோரும் அடங்குவர்.  
தமது பரிசு இந்தியர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசு என்று திரு மோடி தெரிவித்துள்ளார். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹாங்காங்கின் மத்திய வட்டாரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் நேற்று களத்தில் குதித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். செப்டம்பரில் தொடங்கும் பள்ளி பருவத்தையும் மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். படம்: இபிஏ

23 Aug 2019

வன்முறை; ஹாங்காங் வங்கிகள் கண்டனம்