உணவுத் தட்டுப்பாடு; உதவி கோரும் வடகொரியா

வடகொரியாவில் 1.4 மில்லியன் டன் உணவுத் தட்டுப்பாடு இருப்பதாக அந்நாட்டின் அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் அமைப்புக்குக் கடிதம் வழியாகத் தெரிவித்துள்ளனர்.  நிலைத்தன்மையற்ற பருவநிலை, வறட்சி, வெள்ளம் ஆகியவற்றுடன் தன் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துலக வர்த்தகத் தடைகள் ஆகியவை இந்நிலைக்குக் காரணம் என்கிறது வடகொரியா.

 அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த வாரம் நிகழவுள்ள இந்நேரத்தில் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தனது உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க அனைத்துலக அமைப்புகளின் உதவியை நாடுவதாக வடகொரியா அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டது.