பங்ளாதேஷ் தீ விபத்து: ஐவர் குழு விசாரணையைத் தொடங்கியது

டாக்கா: பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவின் சௌக்பஸார் பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 80 பேர் பலியாகினர். இந்தத் தீ விபத்து குறித்து விசாரிக்க ஐவர் அடங்கிய குழுவை அந்நாட்டு உள்துறை அமைச்சு அமைத்துள்ளது. அங்குள்ள வேதிப் பொருள் கிடங்கில் வாசனைத் திரவக் கலன்கள் ஏராளமாக சேமித்து வைக்கப்பட்டிருந்ததால்தான் அருகிலிருந்த நான்கு கட்டடங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் கட்டடங்களில் குடியிருந்தவர்கள், கீழ்த்தளத்தில் இருந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்களோடு அவ்வழியே கார்களில், ரிக்ஷாக்களில் பயணம் செய்தவர்களும் தீக்கிரையாகி மாண்டதாகக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி