அமெரிக்கப் படையினர் 200 பேர் சிரியாவிலேயே தொடர்ந்து இருப்பர்

வா‌ஷிங்டன்: உள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ள சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் மீட்டுக் கொள்ளப்படும் என அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், 200 அமெரிக்க வீரர்கள் மட்டும் அங்கேயே இருந்து அமைதிப் பணியை மேற்கொள்வர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்து இருக்கிறது. சிரியாவில் ஐஎஸ் அமைப்பை வெற்றிகொண்டுவிட்டோம் என டிசம்பர் மாதமே டிரம்ப் பிரகடனம் செய்தார். ஆனால், சிரியாவில் சிறு பகுதியே தங்களின் பிடியில் எஞ்சி இருந்தாலும் ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.