வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை ஆபத்து

பியோங்யாங்: கடும் வெப்பம், வறட்சி, வெள்ளம், ஐக்கிய நாடு கள் மன்றத்தின் தடைகள் ஆகி யவை காரணமாக வடகொரியா வில் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டு மக்க ளுக்கு வழங்கப்படும் நாள் உணவுப் பங்கீடு பாதியாகக் குறை யலாம் என்றும் சொல்லப்படுகிறது.
கொரியத் தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புத் தொடர்பில் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இரண்டாம் முறையாக வியட்னாம் தலைநகர் ஹனோயில் அடுத்த வாரம் சந்தித்துப் பேசவுள்ளனர். 

இந்த நிலையில், உணவுப் பற் றாக்குறை தொடர்பில் ஐநாவிற்கு வடகொரியா எழுதியதாகக் கூறப் படும் இரண்டு பக்கக் கடிதம் வெளியாகியுள்ளது.
வடகொரியாவில் கடந்தாண்டு 4.951 மில்லியன் உணவுப்பொருட் கள் உற்பத்தி செய்யப்பட்டன என்றும் இது, அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 503,000 டன் குறைவு என்றும் அக்கடி தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, 200,000 டன் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய அந்நாடு முடிவு செய்துள் ளது. அதே நேரத்தில், வழக்கத் தைவிட முன்னதாகவே 400,000 டன் உணவுப்பொருட்களை உற் பத்தி செய்யவும் அது திட்டமிட்டு உள்ளது.