மகாதீருக்கு ஆதரவு: ‘பாஸ்’ உறுதி

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அவருக்கு ஆதரவாக வாக்களிப்போம் என ‘பாஸ்’ கட்சி உறுதியளித்துள்ளது.
டாக்டர் மகாதீரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகள் அவரைப் பதவியில் இருந்து அகற்ற சதிசெய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி டாக்டர் மகாதீரை வெளியேற்ற சதித்திட்டம் இடம்பெற்று வருவது உண்மைதான் என்று ‘பாஸ்’ கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“காற்று வீசாமல் மரங்கள் அசையாது. அதே வேளையில், நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தா லும் டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிப்போம். இஸ்லா மியத் தலைமைத்துவத்திற்கு இது மிக முக்கியம்,” என்று திரு ஹாடி கூறினார்.

அவரது பேச்சு தொடர்பான காணொளி ஒன்றும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில், செமென்யே சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரதமரின் பிரிபூமி பெர்சாத்து கட்சி தோற்றால் அதற்குத் தங்க ளைக் குற்றம் சொல்லக்கூடாது என்றும் மாறாக, பிகேஆர், டிஏபி ஆகிய கட்சிகளே அதற்குக் காரணமாக அமையும் என்றும் திரு ஹாடி தெரிவித்துள்ளார்.
டாக்டர் மகாதீரும் திரு ஹாடியும் கடந்த வாரம் சந்தித்துப் பேசினர். அப்போது, செமென்யே இடைத்தேர்தலில் அம்னோ வேட்பாளரை ஆதரிக்கமாட்டோம் என்று ‘பாஸ்’ கட்சி அதிகாரபூர்வ மாக அறிவித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய முன்னாள் பேரரசர் சுல்தான் முகம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த ரிஹானா ஒக்சானா தம்பதியின் திருமண வாழ்க்கை ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. படம்: ரிஹானா/இன்ஸ்டகிராம்

21 Jul 2019

மலேசிய முன்னாள் பேரரசர், ரஷ்ய முன்னாள் அழகி தம்பதியின் விவாகரத்தை உறுதிசெய்த சிங்கப்பூர் வழக்கறிஞர்