நீதிபதி மீது போலிசில் புகார்

கோலாலம்பூர்: தன் மீது தவறான குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறி ஆசிய அனைத்துலக சமரச மன்றத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் டாக்டர் சுந்தரராஜு, மேல்முறையீட்டு நீதிபதியான டாக்டர் ஹமீத் சுல்தான் அபுபக்கர் மீது போலிசில் புகாரளித்துள்ளார். திரு அபுபக்கரின் பிரமாணப் பத்திரத்தில் எவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை. எனினும்  அதில் கூறப்பட்டிருப்பது தமது கட்சிக்காரரைத்தான் என்றும் அதில் உண்மையில்லை என்றும் திரு சுந்தரராஜுவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.