வர்த்தக உடன்பாடு காண  மார்ச் மாதம் டிரம்ப்-கிம் சந்திப்பு 

வா‌ஷிங்டன்: வர்த்தக உடன்பாடு குறித்து இறுதி முடிவெடுப்பதற்காக சீன அதிபர் ஸி ஜின்பிங்கை வரும் மார்ச் மாதம் தான் சந்திக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். வா‌ஷிங்டனில் நடந்த அமெரிக்க-சீன வர்த்தகப் பேச்சு நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முடிவுறவிருந்த பேச்சு மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக திரு டிரம்ப் கூறினார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவிய வர்த்தகப் பூசல் முடிவுக்குவர இந்தப் பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு காணப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் திரு டிரம்ப் கூறினார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்கவிருப்பதாக திரு டிரம்ப் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.