கொலம்பிய எல்லையை ஒட்டிய  பகுதியை மூடியது வெனிசுவேலா

கராக்கஸ்: வெனிசுவேலாவில் அரசியல் குழப்பம் நீடிக்கும் வேளையில் கொலம்பியாவுடனான அதன் எல்லைப் பகுதியில் உள்ள மூன்று பாலங்களை வெனிசுவேலா அரசாங்கம் மூடியுள்ளது. எதிர்க்கட்சி திரட்டிய உதவிப் பொருட்களும் அமெரிக்காவின் உதவிப் பொருட்களும் வெனிசுவேலாவுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுத் தட்டுப்பாட்டால் மக்கள் தவிக்க நேர்ந்துள்ளது. வெனிசுவேலாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆட்சியைக் கவிழ்க்க அந்த நாடுகள் முயற்சிப்பதாக வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றம்சாட்டி வருகிறார்.