மகாதீர்: சக்திவாய்ந்த நாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது 

கோலாலம்பூர்: இந்த வட்டாரத்தில் சக்தி வாய்ந்த நாடுகள் தலையிடாமல் இருக்க ஆசியானும் மலேசியாவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது கேட்டுக்கொண்டுள்ளார். வெளிநாட்டுத் தலையீட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை சுட்டிக்காட்டிய டாக்டர் மகாதீர்,  மலேசியாவும் ஆசியானும் கவனமாக இல்லாவிட்டால் இந்த வட்டாரத்தில் அதே விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் இதனால் ஆசியானின் நிலைத்தன்மை சீர்குலையும் என்றும் எச்சரித்தார். கோலாலம்பூரில் நேற்று நடந்த ஒரு மாநாட்டில் டாக்டர் மகாதீர் சார்பில் வெளியுறவு அமைச்சர் சைபுதின் அப்துல்லா ஆற்றவிருந்த உரையில் பிரதமரின் இந்தக் கருத்து இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.