‘மலேசியாவில் 41,000 வேலைகள் உருவாகும்’

கோலாலம்பூர்: மலேசியாவில் பத்து ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பயனீட்டாளர் விலைக் குறியீடு அடிமட்டத்தைத் தொட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் மலேசியாவின் பொருளியலுக்கு பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவின் பொருளியல் மேலும் 4.9 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று கூறிய அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தயாரிப்புத் துறையில் மேலும் 41,000 வேலைகள் உருவாகும் என்றார்.
பயனீட்டாளர் விலைக் குறியீடு சரிந்துள்ளதைச் சுட்டிக்காட்டி பேசிய நிதி அமைச்சர், நாட்டின் பொருளியல் அல்லது தேவை குறைந்ததாக அர்த்தமல்ல என்று குறிப்பிட்டார்.
மலிவான எரிபொருள், மலி வான பொருட்களின் வரவு போன்றவற்றால் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார்.
அதே சமயத்தில் விலை வீழ்ச்சி, மலேசிய பயனீட்டாளர் களின் வாங்கும் சக்தியை அதி கரிக்கும். 
இதனால் பொருளியல் மேலும் வளர்ச்சி அடையும்.
பயனீட்டாளர் விலைக் குறியீடு 0.7 விழுக்காடு சரிந்தாலும் சாதா ரண மலேசியர்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்க அதிகம் செய்ய வேண்டியுள்ளதை அரசு புரிந்துவைத்துள்ளது.
பயனீட்டாளர் விலைக் குறியீடு வீழ்ச்சியடைந்துள்ளதால் அதன் பலன்கள் மக்களைச் சென்றடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.