சுடச் சுடச் செய்திகள்

அமெரிக்காவுக்கான சவூதி அரேபிய தூதராக இளவரசி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக் கான சவூதி அரேபியத் தூதராக இளவரசி ரீமா பின்ட் பண்டார் அல்-சாத் நியமிக்கப்பட்டுள் ளார்.
சவூதி அரேபியாவில் பெண் ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப் படுவது இதுவே முதல் முறை.
சென்ற சனிக்கிழமை அன்று சவூதி அரேபியா இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இளவரசி ரீமா தமது இளமைக் காலத்தை வா‌ஷிங் டனில் கழித்தவர்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் காஷோகி துருக்கியில் உள்ள சவூதி அரேபியத் தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டதால் அனைத்துலக அளவில் சவூதி அரேபியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் சவூதி அரேபி யாவின் தூதராக இளவரசி ரீமா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜமால் காஷோகிக்கு என்ன ஆனது என்பது பற்றி மாறுபட்ட தகவல்கள் வெளியான  நிலை யில் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு வந்த ஜமால் காஷோகி கொல்லப்பட்டார் என்பதை சவூதி அரேபியா பின்னர் ஒப்புக்கொண்டது.
சவூதி அரேபிய அரசாங் கத்தைக் கடுமையாக விமர் சித்து வா‌ஷிங்டன் போஸ்ட் நாளிதழில் தொடர்ந்து பத்திரி கையாளர் ஜமால் காஷோகி கட்டுரைகளை எழுதி வந்ததால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹமட் சல்மானுக்கு தொடர்பிருக் கலாம் என்று அமெரிக்கா சந் தேகிக்கிறது. 
ஆனால் இதனை முஹமட் மறுத்துள்ளார்.