இம்ரான் கான்: அமைதிக்கு வாய்ப்பு கொடுங்கள்

இஸ்லாமாபாத்: அமைதிக்கு வாய்ப்பு கொடுக்கும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா தகுந்த ஆதாரங்களைத் தந்தால் அண்மையில் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் உயிரைப் பறித்த தற்கொலைத் தாக்குத லுக்குக் காரணமானவருக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். இந்தத் தகவலை பாகிஸ்தானின் டான் நாளிதழ் தெரிவித்தது.
பதான் இனத்தைச் சேர்ந்தவர் உண்மையென்றால்  தாக்கு தலுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி இம்ரான் கானுக்குச் சவால் விட்டிருந்தார் பிரதமர் மோடி.  பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றபோது ஏழ்மை, கல்வியின்மை ஆகியவற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட லாம் என்று தாம் அவரிடம் தெரி வித்ததாக மோடி நினைவுகூர்ந்தார்.  அதற்கு இணங்கிய இம்ரான் கான் தாம் பதான் இனத்தைச் சேர்ந்தவன் என்றும் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் என்றும் கூறியிருந்ததாக மோடி தெரிவித்தார்.
பாகிஸ்தானின் மண்ணைத் தளமாகக் கொண்டு புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா ஆதாரங்களைக் கொடுத் தால் பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று சில நாட்களுக்கு முன்பு காணொளி மூலம் இம்ரான் கான் தெரி வித்திருந்தார்.
ஆதாரம் கொடுத்தால் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இம்ரான் கான் கூறியிருப்பதைச் சாக்குப்போக்கு என்று இந்தியா சாடியுள்ளது.
“ஜெய்ஷ் இ முகம்மது பயங் கரவாத அமைப்பு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது என்றும் அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருக்கிறார் என்றும் அனைவரும் அறிந்ததே. இதுவே போதுமான ஆதாரமாகும். பாகிஸ்தான் உடனடியாக நடவடிக் கை எடுக்க இது ஒன்றே போதும்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார்  அந்த விமானத்தின் சிப்பந்தி. படம்: காணொளி ஸ்கிரீன்கிராப்

19 Jun 2019

மோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி

அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.
படம்: ராய்ட்டர்ஸ்

19 Jun 2019

ஜி20 மாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப்

அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் உச்சநிலை மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடக்கவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

ஜி-20 உச்சநிலை மாநாட்டில் வர்த்தகமும் உலக வர்த்தக நிறுவனத்தின் சீரமைப்பும் விவாதிக்கப்படும்: ஜப்பான்