பங்ளாதேஷ் விமானக் கடத்தல்காரனிடம் பொம்மை துப்பாக்கி இருந்தது: போலிஸ்

டாக்கா: பங்ளாதே‌ஷிலிருந்து துபாய் செல்லவிருந்த விமா னத்தைக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை பங்ளாதேஷ் அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
பங்ளாதே‌ஷின் சிட்டகொங் நகரில் அந்தப் பயணிகள் விமானம் பாதுகாப்பாகத் தரை இறங்கிய பிறகு பாதுகாப்புப் படை யினர் அதனை முற்றுகை யிட்டனர்.
10 நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் அந்தக் கடத்தல்காரனை அவர்கள் சுட்டதாக ராணுவ அதி காரி ஒருவர் கூறினார்.
அதற்கு பிறகு மேற்கொள்ளப் பட்ட விசாரணையில், அந்தச் சந்தேக ஆடவரிடம் பொம்மைத் துப்பாக்கி இருந்தது தெரியவந்த தாக அவர் குறிப்பிட்டார். அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

“அந்தச் சந்தேக ஆடவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டதாகத் தெரி கிறது. அவரது மனைவியுடன் அவருக்கு தனிப்பட்ட பிரச்சினை இருந்ததாகவும் பிரதமருடன் பேச வேண்டும் என்று அவர் வலியுறுத் தியதாகவும் நாங்கள் கேள்விப் பட்டோம்,” என்ற அந்த ராணுவ அதிகாரி, விசாரணை நடைபெற்று வரும் வேளையில் இப்போது இந்தச் சம்பவம் குறித்து எந்த வொரு முடிவுக்கும் வந்துவிட முடி யாது என்று சொன்னார்.
விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அந்த ஆடவர் ஏற்கெனவே மிரட்டியதாக பங்ளா தேஷ் சிவில் விமானப் போக்கு வரத்துத் தலைவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் பிமன் பங்ளாதேஷ் ஏர்லைன்ஸ் விமா னத்தில் பயணம் செய்த 134 பயணிகளும் 14 பணியாளர்களும் காயமின்றி மீட்கப்பட்டதாக அதி காரிகள் கூறினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய முன்னாள் பேரரசர் சுல்தான் முகம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த ரிஹானா ஒக்சானா தம்பதியின் திருமண வாழ்க்கை ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. படம்: ரிஹானா/இன்ஸ்டகிராம்

21 Jul 2019

மலேசிய முன்னாள் பேரரசர், ரஷ்ய முன்னாள் அழகி தம்பதியின் விவாகரத்தை உறுதிசெய்த சிங்கப்பூர் வழக்கறிஞர்