பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; சீனப் பொருட்கள் மீதான வரிவிதிப்பு தள்ளிவைப்பு

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நல்லதைத் தேடித் தரும் வகையில், பெய்ஜிங்குடன் தாம் வர்த்தக உடன்பாட்டை எட்ட விரும்புவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த் தையில் அனைத்தும் சுமுகமாக சென்றால் அடுத்த ஓரிரு வாரங் களில் மிக முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் சொன்னார்.
வரும் வெள்ளிக்கிழமை நடப் புக்கு வரவிருந்த 200 பில்லியன் டாலர் (S$270 பில்லியன்) மதிப்பி லான சீனப் பொருட்கள் மீதான வரிவிதிப்பு தள்ளிவைக்கப்படு வதாக வெளியான அறிவிப்பை அடுத்து திரு டிரம்ப் இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகா ரத்தில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் சீனாவுடன் வர்த்தக உடன்பாட்டை எட்ட புளோரிடாவில் அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் உடன் உச்சநிலைச் சந்திப்பை நடத்த தாம் திட்டமிடப் போவதாக திரு டிரம்ப் கூறினார்.
“பேச்சுவார்த்தைகளில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற் றத்தின் காரணமாக, மார்ச் 1ஆம் தேதி நடப்புக்கு வரவிருந்த வரி விதிப்பை நான் தள்ளிவைக் கிறேன்,” என்றார் அவர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேங்காக்கில் உள்ள உள்ளூர் வாக்குச்சாவடிகளுக்கு விநியோகிப் பதற்காக வாக்களிப்பு விவரங்கள் அடங்கிய தாளுடன் தயாராக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகள் படம்: ஏஎஃப்பி

24 Mar 2019

ஐந்து ஆண்டு ராணுவ ஆட்சிக்குப் பிறகு தேர்தல்

பிரம்புக் கூடையில் வைத்து  மனிதக் குரங்கை கடத்த ரஷ்யர் முயற்சி செய்தார் என்று அதிகாரி ஒருவர் விளக்குகிறார். நடுவில் கைது செய்யப்பட்ட ரஷ்யரான ஆன்ட் ரெய் ஷெஸ்ட்கோவ். படம்: ஏஎஃப்பி

24 Mar 2019

பெட்டியில் மனிதக்குரங்கை கடத்திய ரஷ்யர் கைது