டிரம்ப்: வடகொரியா அதிவேகமாக வளரக்கூடும்

வா‌ஷிங்டன்: வடகொரியா அணு வாயுதத்தைக் கைவிட்டால் பொரு ளியலில் சக்திமிக்க உலக நாடு களில் ஒன்றாக மாறக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த திரு டிரம்ப், வேறெந்த நாட்டையும்விட அதிவே கமாக வளரும் வாய்ப்பு வடகொரி யாவுக்கு இருப்பதாகக் கூறினார்.
வடகொரியா இன்னமும் ஓர் அணுவாயுத அபாயம்தான் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரி வித்த ஒருசில மணி நேரம் கழித்து திரு டிரம்ப்பின் கருத்து வெளியாகியுள்ளது.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், திரு டிரம்ப் இருவரும் இரண்டாவது முறையாக நேருக்கு நேர் சந்தித்துப் பேசவுள்ளனர். வியட்னாம் தலைநகர் ஹனோயில் இந்த உச்சநிலைச் சந்திப்பு நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.
“சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் உச்சநிலைச் சந்திப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர வேண்டும் என்று நாங்கள் இருவரும் ஒருமனதாக விரும்பு கிறோம்,” என்று திரு டிரம்ப் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் தெரி வித்துள்ளார். 
இரு நாட்டுத் தலைவர்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் முதன்முறையாக உச்சநிலைச் சந்திப்பை நடத்தினர்.
அமெரிக்க மாநில ஆளுநர் களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் நேற்று முன்தினம் பேசிய திரு டிரம்ப், தமக்கும் திரு கிம்முக்கும் இடையே சிறந்த ஓர் உறவு உருவாகியிருப்பதாக குறிப்பிட்டார்.