ஜோக்கோவி: மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் கிராமங்களுக்கு 30 பில்லியன் டாலர் கிடைக்கும்

இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, வரும் பொதுத்தேர்தலில் மீண்டும் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் 30 பில்லியன் டாலர் அரசாங்கப் பணத்தைக் கிராமங்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னைய ராணுவத் தலைவர் பிரபோவோ சுப்பியாண்டோவைத் தேர்தல் களத்தில் சந்திக்கும் திரு விடோடோ, இந்தத் தகவலை ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைக்காட்சி உரை ஒன்றில் தெரிவித்தார்.

திரு விடோடோவின் நிர்வாகம் கிராமங்களுக்கு 257 ட்ரில்லியன் ரூப்பியா பணத்தை (24.79 பில்லியன் வெள்ளி) பணமாற்றம் செய்திருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு திரு விடோடோ பதவியில் நீடித்தால் இந்தத் தொகை 400 ட்ரில்லியன் ரூப்பியாவுக்கு உயரக்கூடும்.

“இந்தோனீசியாவில் பாதி பேர் கிராமங்களில் வாழ்கின்றனர். நகரங்களைவிட கிராமங்களில் வறுமை அதிகமாக இருக்கிறது,” என்று திரு விடோடோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடம் ஜகார்த்தாவில் நடந்த பேரணி ஒன்றில் தெரிவித்தார். “நாங்கள் மக்களுக்கு மேலும் நியாயமான முறையில் வளங்களை விநியோகம் செய்வோம்,” என அவர் கூறினார்.

2015ஆம் ஆண்டில் திரு விடோடோவின் ‘கிராம நிதித்திட்டம்’ தொடங்கியது முதல் இந்தோனீசியாவின் ஊழல் தடுப்புப் பிரிவு, இதுவரை ஊழல் குற்றச்சாட்டின்பேரில் நூற்றுக்கணக்கான அதிகாரிகளைக் கைது செய்துள்ளது. ஆனால் திரு விடோடோவின் முயற்சிகள் வாக்குகளைப் பெறுவதற்காகச் செய்யப்பட்டவை என்று அவரது அரசியல் எதிராளி பிரபோவோ குற்றம் சாட்டுகிறார். திரு விடோடோ நிதியைச் சரியாக நிர்வகிக்கவில்லை என்றும் திரு பிரபோவோ கூறுகிறார். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார்  அந்த விமானத்தின் சிப்பந்தி. படம்: காணொளி ஸ்கிரீன்கிராப்

19 Jun 2019

மோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி

அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.
படம்: ராய்ட்டர்ஸ்

19 Jun 2019

ஜி20 மாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப்

அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் உச்சநிலை மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடக்கவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

ஜி-20 உச்சநிலை மாநாட்டில் வர்த்தகமும் உலக வர்த்தக நிறுவனத்தின் சீரமைப்பும் விவாதிக்கப்படும்: ஜப்பான்