டிரம்ப்பின் அவசரநிலை பிரகடனத்தைத் தடுக்க ஜனநாயகக் கட்சியினர் முயற்சி

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அவசரநிலை பிரகடனம் மூலமாக எல்லைச் சுவரைக் கட்டுவதற்கான நிதியைப் பெறுவதைத் தடுக்க ஜனநாயக் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியை நாடாளுமன்ற பேச்சாளர் நேன்சி பெலோசி வழிநடத்துகிறார்.

“திரு டிரம்ப்பின் இந்தச் செயல், அரசமைப்புச் சட்டத்தைக் கட்டிக்காக்கவேண்டிய அவரது பொறுப்புக்கு எதிரானது. அமெரிக்காவை நிறுவியவர்கள் அமைத்திருக்கும் அதிகார பகுப்பு முறைக்கு விரோதமாக அவர் நடந்துகொள்கிறார்,” என்று திருவாட்டி பெலோசி கூறினார்.

அமெரிக்க அரசாங்கம் மற்றொரு முறை முடங்காமல் இருக்க திரு டிரம்ப், பிப்ரவரி 15ஆம் தேதியன்று அவசர நிலையை அறிவித்தார். சுவரை எழுப்ப அவருக்குத் தேவைப்படும் 5.7 பில்லியன் டாலரைத் தர ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அமெரிக்க நாடாளுமன்றம் மறுத்ததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

திரு டிரம்ப்பின் பிரகடனத்தைத் தடுப்பதற்கான வாக்கெடுப்பு ஜனநாயகக் கட்சியினருக்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’