‘அமெரிக்க-சீன உடன்பாடு மிகவும் நெருங்கிவிட்டது’

வா‌ஷிங்டன்: வர்த்தக ஒப்பந்தத் தில் கையெழுத்திட அமெரிக் காவும் சீனாவும் மிகவும் நெருங்கி விட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இதனால் இரு பெரும் நாடு களுக்கு இடையிலான வர்த்தக பூசல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஆளுநர்களிடம் பேசிய திரு டிரம்ப், "இரு நாடு களும் விரைவில் கையெழுத்திடும் சடங்கில் பங்கேற்கும்," என்று கூறினார்.
பேச்சுவார்த்தை முழுமை பெறும் என்று தாம் நம்புவதாகக் கூறிய அதிபர் டிரம்ப், மிகவும் நெருங்கி வந்துள்ளோம் என்றார்.
சீனாவிலிருந்து அமெரிக் காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பதை அமெரிக்கா ஒத்தி வைத்துள்ள நிலையில் இரு தரப்பு பேச்சு வார்த்தையில் மேலும் முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் பேசிய அதிபர் டிரம்ப், வா‌ஷிங்டனில் நடை பெற்ற பேச்சு வார்த்தைக்குப்பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியி ருந்தார். வரும் மார்ச் 1ஆம் தேதி சீனப் பொருட்களுக்கு 10 விழுக் காடு முதல் 25 விழுக்காடு வரை வரியை அதிகரிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

ஆனால் புளோரிடாவில் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடனான உச்சநிலைச் சந்திப்புக்கு அமெரிக்கா திட்டமிட்டு வரு வதாக அதிபர் டிரம்ப் குறிப் பிட்டார்.
இதையடுத்து அமெரிக்க பங்கு விலைகள் அதிகரித்தன. டவ்ஜோன்ஸ் தொழிலியல் குறியீடு 0.23 விழுக்காடு அதி கரித்து 26,091.9ல் முடிவடைந்தது. எஸ்&பி 500, நாஸ்டாக் பங்கு களும் ஏற்றம் கண்டன. வியட் னாமில் வடகொரியத் தலைவர் கிம்மை சந்திக்கும் வேளையில் சீன வர்த்தக உடன்பாடும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட தாக அதிபர் டிரம்ப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!