பாலியல் வழக்கில் பாதிரியார் குற்றவாளி

சிட்னி: குழந்தைகளைப் பாலி யல் துன்புறுத்தலுக்கு ஆளாக் கிய வழக்கில் கார்டினல் ஜார்ஜ் பெல் குற்றவாளி என ஆஸ்தி ரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
1996ல் மெல்பர்ன் தேவாலயத் தில் உள்ள அறையில் பாடகர் குழுவில் இடம்பெற்ற இரு சிறு வர்களிடம் அவர் பாலியல் செயல்களில் ஈடுபட்டார்.
இதன் தொடர்பான வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சட்டக் காரணங்களுக்காக தீர்ப் பின் விவரம் வெளியிடப்பட வில்லை. இந்த நிலையில் நேற்று தீர்ப்பு வெளியானது.
சிறைத் தண்டனையை ஜார்ஜ் பெல் தொடங்க வேண்டும். ஆனால் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
1996ல் மெல்பர்ன் நகர பேராயராக இருந்த ஜார்ஜ் பெல், பாடகர் குழு நிகழ்ச்சிக்குப்பிறகு 13 வயதில் இருந்த இரு சிறுவர்களையும் தனி அறையில் சந்தித்தார்.
அப்போது கட்டாயப்படுத்தி சிறுவர்களை அநாகரிகமான செயல்களில் அவர் ஈடுபட வைத் தார். 1997ல் சிறுவர்களில் ஒரு வனிடம் அவர் மீண்டும் பாலியல் செயல்களில் ஈடுபட்டார் என்று நீதிமன்ற விசாரணையின்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.