பிரதமர் மகாதீர்: செலவு குறைவாக இருந்தால் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் திட்டம் தொடரலாம்

கிள்ளான்: தற்போதைய சூழ்நிலை யில் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் திட்டத் துக்கான செலவு மலேசியாவுக்கு மிக அதிகம் என்று பிரதமர் மகா தீர் கூறியுள்ளார்.
“மலேசியாவுக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.
“செலவுகளைக் குறைத்து அந்தத் திட்டத்தை மேற்கொள்வது ஒரு வழி. முழுமையாக அதனை ஒத்திவைப்பது மற்றொரு வழி. 
“செலவு குறைவாக இருந்தால் ரயில் திட்டத்தை தொடர தயார். ஆனால் தற்போது ரயில் திட்டத் துக்கான செலவில் இணக்க மில்லை,” என்று பிரதமர்  குறிப் பிட்டார். “ஈஸ்ட் கோஸ்ட் ரயில் திட்டத்துக்கு மலேசியா குறை வாகவே செலவழிக்க விரும்பு கிறது. இதற்கான செலவு 55 பில் லியன் ரிங்கிட் (18 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி). இந்தக் கடனை அடைக்க மலேசியாவுக்கு முப்பது ஆண்டுகள் ஆகும்.
பெரும் வட்டியையும் மலேசியா ஈடுகட்டியாக வேண்டும். 
வட்டி மட்டும் 140 பில்லியன் ரிங்கிட் என்று டாக்டர் மகாதீர் சொன்னார்.
ரயில் திட்டத்தை வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் தற்போது எங்களிடம் அந்த அளவுக்குப் பணமில்லை.
மலேசியாவுக்கு ஏராளமான கடன்கள் உள்ள சூழ்நிலையில் செலவுகளில் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள தாகவும் பிரதமர் மகாதீர் தெரி வித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தாக்குதல் நடந்த பள்ளிவாசலுக்கு முன்பு மலர்க்கொத்துகளை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் மக்கள். படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ஒற்றுமைக்கு அறைகூவல் விடுத்த நியூசிலாந்து பிரதமர்

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகே மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தும் இளையர்கள். படம்: ஏஎப்பி

20 Mar 2019

நெதர்லாந்து துப்பாக்கிச் சூடு: சந்தேகப் பேர் வழி கைது