4,000 கி.மீ. பயணத்துக்குப் பிறகு கிம் வியட்னாம் சேர்ந்தார் 

4,000 கி.மீட்டர் ரயில் பயணத்துக்குப் பிறகு காரில் ஏறி ஹனோய் செல்லும் வடகொரியத் தலைவர் கிம். படம்: ஏஎஃப்பி

ஹனோய்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் 4,000 கி.மீட்டர் ரயில் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று வியட்னாமின் எல்லையோர நகரமான டோங் டாங் வந்து சேர்ந்தார்.
ஹனோயில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை அவர் இரண் டாவது முறையாக சந்திக்கவிருக் கிறார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சுற்று சந்திப்புக்குப் பிறகு இரண்டாவது அமெரிக்க-வட கொரிய உச்சநிலை சந்திப்பு வியட் னாமில் நடைபெறுகிறது.
டோங் டாங் எல்லையோர நிலையத்தில் ரயிலிலிருந்து இறங் கிய கிம்முக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு பக்கமும் கொடியசைத்து பொது மக்களும் அவரை வரவேற்றனர்.
ரயிலிலிருந்து திரு கிம் இறங்கியதும் பாதுகாவலர்கள், அதிகாரிகள், புகைப்படக்காரர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர்.
பின்னர் கறுப்பு நிற காரை நோக்கி அவர் அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அதே சமயத்தில் கறுப்புக் கோட்டு அணிந்த அவரது சிறப்பு மெய்க்காவலர்கள் காரை சூழ்ந்து கெண்டனர்
பொதுமக்களை நோக்கி கையை அசைத்தபடியே காரில் ஏறி அவர் ஹனோய் புறப்பட்டார். மெய்க்காவலர்களும் காரின் பக்கவாட்டில் தொடர்ந்து ஓடினர். 
திரு கிம் பயணம் செய்த சாலை பொதுப்போக்குவரத்துக்கு மூடப்பட்டது. 
சாலையெங்கும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருந்தது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விமானம் மூலம் வியட் னாமுக்கு வருகிறார்.
இருவரும் நாளை சந்தித்துப் பேசவிருக்கின்றனர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி