நஜிப் ரசாக்: ‘பாஸ்கு’ என்றே என்னை அழைக்கின்றனர்

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு  மற்ற வர்கள் ‘பாஸ்கு’ (என்னுடைய முதலாளி) என்று அழைப்பது பழகி விட்டது. இப்போதெல்லாம் அவரது பெயரைச் சொல்லி யாரும் அழைப்பது இல்லை. செமினி தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோதும்  அவரது ஆதரவாளர்கள் ‘பாஸ்கு’ என்றே முழக்கமிட்டு அவரை வரவேற்றனர். “கடந்த சில நாட்களில் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு அழைத்தனர். ஆனால் இப்போது இரவு நேரத்தில் சந்தைக்குச் சென்றாலும் அவர்கள் என்னுடைய பெயரைப் பயன்படுத்துவதில்லை,” என்று நஜிப் கூறினார்.
சிலாங்கூரில் உள்ள செமினி தொகுதியில் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதனால் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட நான் சந்திக்கும் அனைவரிடமும் கைகுலுக்குகிறேன். வெளிநாட்டு ஊழியர்களால் எனக்கு வாக்கு அளிக்க முடியாது. ஆனால் அவர்களும் என்னை ‘பாஸ்கு’ என்றே அழைக்கின்றனர்,” என்றார் அவர்.