இம்ரான் கான்: பேச்சுவார்த்தைகளுக்குத் தயார்

பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், அமைதி பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியாவை அழைத்திருக்கிறார். இந்தியாவுடனான பிரச்சினையைத் தீர்க்க மதிநுட்பத்தையும் புத்திக்கூர்மையையும் பயன்படுத்துவது அவசியம் என்று திரு கான் தொலைக்காட்சி உரை ஒன்றில் கூறியிருக்கிறார். புல்வாமா விவகாரத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் தயார் என்றும் திரு இம்ரான் கான் தெரிவித்தார்.

இந்நிலையில், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியா, தனது போர்விமானங்கள் எல்லைப் பகுதியைத் தாண்டி பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத முகாம்களின்மீது வெடிகுண்டுகளை போட்டு அவற்றை அழித்ததாகக் கூறுகிறது. அத்தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் மடியவில்லை என்றும் பொதுமக்கள் மடிந்ததாகவும் பாகிஸ்தானிய தரப்பு கூறுகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றநிலை அதிகரித்துவருவது குறித்து அக்கறையாக இருப்பதாக நேப்பாள அரசாங்கம் தெரிவித்தது.