இன உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய சொற்களுக்காக மன்னிப்பு கேட்கும் ஐபிஎம் நிறுவனம்

இன உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய சொற்கள் தனது இணைய விண்ணப்ப முறையில் இடம்பெற்றது குறித்து ஐபிஎம் தொழில்நுட்ப நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

ஐபிஎம்மின் இணைய விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இனப் பிரிவுகள் விண்ணப்பதாரர்களைப் புண்படுத்தியதாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ‘மஞ்சள் நிறத்தவர்’, ‘மல்லட்டோ கலப்பட இனத்தவர்’ போன்ற தொடர்கள் இந்த காலத்திற்கு ஒவ்வாதவை என்று விண்ணப்பதாரர்கள் கூறினர். சிறந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இவற்றைப் பயன்படுத்துவது வியப்புக்குரியது என்று விண்ணப்பதாரர்கள் கூறினர். 

ஐபிஎம் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு இணையத்தளங்களில் இத்தகைய வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பேச்சாளர் இதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.